Home கலை உலகம் ‘என்டர் தி டிராகன்’ படத்தில் புரூஸ்லீயுடன் நடித்த ஜிம்கெல்லி மரணம்

‘என்டர் தி டிராகன்’ படத்தில் புரூஸ்லீயுடன் நடித்த ஜிம்கெல்லி மரணம்

799
0
SHARE
Ad

ஜூலை 2- பிரபல ஹாலிவுட் நடிகர் ஜிம்கெல்லி ( வயது 67) அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர்.

இவர் கராத்தே வீரர் புரூஸ்லீயுடன் ‘என்டர் தி டிராகன்’ படத்தில் நடித்துள்ளார். ஆப்பிரிக்கர்கள் பாணியில் தலைமுடி அலங்காரத்துடன் இருப்பார். அது அவரது தனி அடையாளமாகும்.

Jim Kellyஇந்த நிலையில், அவர் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். இந்த தகவலை அவரது முன்னாள் மனைவி மரில்யன் டிஷ்மான் தெரிவித்துள்ளார். இவர் புற்றுநோயால் அவதிப்பட்டதாகவும், சிகிச்சை பலனின்றி இறந்ததாகவும் கூறினார்.

#TamilSchoolmychoice

ஜிம்கெல்லி ‘என்டர் தி டிராகன்’ படம் தவிர ‘திரீதி ஹார்ட்வே’ பிளாக் பெல்ட் ஜோன்ஸ் மற்றும் பிலாக் சாமுராய் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

அவர் கடந்த 2010-ம் ஆண்டில் ஒரு இணையதளத்துக்கு பேட்டி அளித்தார். அதில் 1964-ம் ஆண்டில் கென்ட்க்கியில் உள்ள கராத்தே பள்ளியில் பயிற்சி முடித்தேன்.

பின்னர் சினிமாவில் நடிக்க கலிபோர்னியா வந்தேன். புரூஸ்லியுடன் ‘என்டர் தி டிராகனில்’ நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருடன் நடித்தது எனது வாழ்க்கையில் கிடைத்த இனிய அனுபவங்களில் ஒன்றாகும். அவருடன் மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் நடித்தேன் என தெரிவித்துள்ளார்.