Home கலை உலகம் அரசி வேடத்தில் நடிக்கும் அனுஷ்காவுக்கு ரூ.5 கோடிக்கு நகைகள் வாங்கப்பட்டன

அரசி வேடத்தில் நடிக்கும் அனுஷ்காவுக்கு ரூ.5 கோடிக்கு நகைகள் வாங்கப்பட்டன

646
0
SHARE
Ad

ஜூலை 3- தமிழ் தெலுங்கில் தயாராகும் ‘ருத்ரமாதேவி’ படத்தில் நடிக்கும் அனுஷ்காவுக்கு ரூ.5 கோடிக்கு அசல்  தங்க, வைர நகைகள் வாங்கப்பட்டு உள்ளது.

3329099994_99461c4072 (1)‘ருத்ரமா தேவி’ அரசியின் வரலாற்றை மையமாக வைத்து இப்படத்தை எடுக்கின்றனர். இதில் அனுஷ்கா ருத்ரமாதேவி ராணி கதாபாத்திரத்தில்  வருகிறார். ராணா, பிரகாஷ் ராஜ் போன்றோரும் நடிக்கின்றனர். ரூ.40 கோடி செலவில் இப்படம் எடுக்கப்படுகிறது.

இதில் நடிப்பதற்காக அனுஷ்கா குதிரையேற்றம் யானை சவாரி பயிற்சிகள் பெற்றார். வாள் சண்டையும் கற்றார். ஏற்கனவே ‘அருந்ததி’ படத்தில் அரசி வேடத்தில் நடித்துள்ளார். எனவேதான் ‘ருத்ரமாதேவி’ படவாய்ப்பு அவருக்கு கிட்டியது. 3டியில் உருவாகிறது.

#TamilSchoolmychoice

இந்த படத்தில் அனுஷ்கா அணிந்து கொண்டு நடிப்பதற்காக அசல் தங்க, வைர நகைகளை விலைக்கு வாங்கியுள்ளனர். ரூ.5 கோடி மதிப்பிலான நகைகளை அணிந்து நடித்து வருகிறார்.

இதுவரை வேறு எந்த இந்திய மொழிப் படங்களுக்கும் படப்பிடிப்புக்காக இவ்வளவு செலவில் நகைகள் வாங்கப்பட்டது இல்லை. இந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.