Home அரசியல் “13 வது பொதுத்தேர்தல் முறைகேடுகள் மீது தான் ஆர்.சி.ஐ அமைக்க வேண்டும் – ‘ரெட் பீன்...

“13 வது பொதுத்தேர்தல் முறைகேடுகள் மீது தான் ஆர்.சி.ஐ அமைக்க வேண்டும் – ‘ரெட் பீன் ஆர்மி’ மீது அல்ல” – லிம் கிட் சியாங்

604
0
SHARE
Ad

Lim Kit Siangகோலாலம்பூர், ஜூலை 3 –  ‘ரெட் பீன் ஆர்மி’ (Red Bean Army) என்ற அமைப்பின் மீது அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கோரிக்கையை, ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் நிராகரித்துள்ளார்.

அதோடு  ‘ரெட் பீன் ஆர்மி’ மீது அரச விசாரணை அமைப்பதற்குப் பதிலாக 13 வது பொதுத்தேர்தலில் நடத்தப்பட்ட முறைகேடுகள் மீது தான் விசாரணை அமைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

“‘ரெட் பீன் ஆர்மி’ க்கு ஜசெக நிதி வழங்குவதாக கூறப்படும் பொய் குற்றச்சாட்டு மீது ஆர்.சி.ஐ அமைக்கப்பட்டால், ஒரு கற்பனைக் குற்றச்சாட்டுக்கு அரச விசாரணை அமைத்த முதல் நாடாக மலேசியா வரலாறு படைக்கும்” என்றும் லிம் கிட் சியாங் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

‘ரெட் பீன் ஆர்மி’ என்ற அமைப்பின் மீது அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று வரும் வெள்ளிக்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப் போவதாக பிரதமர் துறை அமைச்சரான ஷாஹிடன் காஸிம் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் நெருக்கடிகளையும், இனப் பிரச்சனைகளையும் ‘ரெட் பீன் ஆர்மி’ என்ற அந்த அமைப்பு ஏற்படுத்திவருவதாகவும், அதற்கு ஜசெக நிதி உதவி செய்வதாகவும் 130 அரசு சார்பற்ற இயக்கங்கள் கூறிவருகின்றன.