Home நாடு இலங்கை போர் பற்றிய ஆவணப்படத்தை திரையிட்டுக் காட்டிய 3 பேர் கைது!

இலங்கை போர் பற்றிய ஆவணப்படத்தை திரையிட்டுக் காட்டிய 3 பேர் கைது!

545
0
SHARE
Ad

Sri Lanka Civil Warகோலாலம்பூர், ஜூலை 4 – ‘No Fire Zone: In the Killing Fields of Sri Lanka’ என்ற இலங்கை போர் பற்றிய ஆவணப்படத்தை, முன் அனுமதி இன்றி பொதுமக்களுக்கு திரையிட்டுக் காட்டிய மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சிலாங்கூர் சீன அசெம்ளி மண்டபத்தில் திரையிடப்பட்ட இந்த ஆவணப்படத்தை கோலாலம்பூரைச் சேர்ந்த இரண்டு அரசு சாரா அமைப்புகள் மற்றும் சிவில் உரிமை குழுவும் ஏற்பாடு செய்திருந்தன.

படம் திரையிடப்பட்ட 10 நிமிடங்களில் அங்கு வந்த உள்துறை மற்றும் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் படம் மற்றும் கணினி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் ஏற்பாட்டாளர்களில் மூவரை விசாரணைக்காக டாங் வாங்கி காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

#TamilSchoolmychoice

இலங்கைப் போரின் போது ஈழத்தமிழர்களுக்கு அந்நாட்டு இராணுவத்தால் இழைக்கப்பட்ட கொடூரச் செயல்களை அப்பட்டமாக சித்தரிக்கும் அந்த ஆவணப்படம், உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.