சான் பிரான்ஸிஸ்கோ, ஜூலை 4- அமெரிக்காவைச் சேர்ந்தவர் விஞ்ஞானி டக்லஸ் எங்கெல்பர்ட்(வயது 88).
1925-ம் ஆண்டு போர்ட்லாண்டில் பிறந்த இவர் ஆகுமென்டேசன் ஆராய்ச்சி மையத்தில் 1960-களில் பணியாற்றினார்.
சான் பிரான்ஸிஸ்கோவில் 1000 விஞ்ஞானிகள் முன்னிலையில் கணினி சுட்டியை அறிமுகப்படுத்தி இவர் மணிக்கணக்கில் பேசினார்.
இதனால் கணினியின் பயன்பாடு சாதாரண மக்களிடமும் பிரபலமானது. கணினியில் சுட்டியின் பயன்பாடு தற்போதும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இவர் நீண்ட காலமாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை அவர் உடல்நிலை மோசமானது.
தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மரணடைந்தார்.