Home கலை உலகம் ஷாருக்கானுக்கு வாடகை தாய் மூலம் ஆண் குழந்தை

ஷாருக்கானுக்கு வாடகை தாய் மூலம் ஆண் குழந்தை

694
0
SHARE
Ad

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு வாடகை தாய் மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தி நடிகர் ஷாருக்கான் – கௌரி ஷாருக்கான் தம்பதிக்கு ஏற்கனவே ஆர்யன் என்ற மகனும், சுஹானா என்ற மகளும் உள்ளனர்.

இந்த தம்பதியினர் வாடகை தாய் மூலம் மற்றொரு குழந்தையை பெற்று கொள்ள விரும்பினர். இதற்காக வாடகை தாய் ஒருவரை நியமித்து இருந்தாக தெரியவந்தது.

#TamilSchoolmychoice

அந்த பெண்ணின் வயிற்றில் வளர்ந்ததை ஆண் குழந்தை என்று ஷாருக்கான் பாலினம் கண்டறிந்ததாக பரபரப்பாக பேசப்பட்டது.

shahrukh_khan_Family-Pics{1}கடந்த ஒரு மாத காலமாக பரபரப்பை ஏற்படுத்திய ஷாருக்கானின் வாடகைத்தாய் குழந்தை பற்றிய முழு தகவல்களும் தற்போது வெளியாகியுள்ளன.

கடந்த மே மாதம் 27ஆம் தேதி, அந்தேரியில் உள்ள மஸ்ரானி பெண்கள் மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தை ஒன்றின் பிறப்புச் சான்றிதழ் விண்ணப்பம் மும்பை மாநகராட்சி கழகத்திற்கு வந்துள்ளது.

அதில் பெற்றோர்களின் பெயராக ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கௌரிகானின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன.

குழந்தை 34 வாரங்களில் பிறந்ததாகவும், 1.5 கிலோ எடையுடன் இருந்ததாகவும் மாநகராட்சிக் கழகத்தின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் அருண் பாம்னே தெரிவித்துள்ளார்.

விரைவில் இந்தக் குழந்தை குறித்து செய்தியாளர்களிடம் ஷாருக்கான் அறிவிப்பு வெளியிடப் போகிறாராம்.