சென்னை, ஜூலை 5- விளம்பரங்களுக்காக அரசுப் பணம் விரயம் செய்யப்படுவதாகவும், முதல்வர் ஜெயலலிதாவை விமர்சனம் செய்தும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பேசினார்.
இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த 1-ம்தேதி விஜயகாந்த் ஆஜராகவேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. அவர் ஆஜராகவில்லை. அவர் சார்பில் வழக்கறிஞரும் ஆஜராகவில்லை. எனவே, விஜயகாந்துக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து பிடிஆணை ரத்து செய்யவேண்டும் என்று கோரி விஜயகாந்த் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நேற்று நீதிபதி சொக்கலிங்கம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயகாந்த் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 1-ம் தேதி விஜயகாந்த் ஆஜராக முடியாததற்கான காரணத்தை விளக்கினார்.
இதனை ஏற்ற நீதிபதி, விஜயகாந்த் மீதான பிடிஆணை உத்தரவை ரத்து செய்தார். மேலும் வழக்கு விசாரணையை 29-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அப்போது விஜயகாந்த் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.