Home வாழ் நலம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் வெண்டைக்காய்!

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் வெண்டைக்காய்!

931
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூலை 6- நீரிழிவு நோய் வந்துவிட்டால், அதனை முற்றிலும் சரிசெய்ய முடியாது.

ஆனால் நோயை கட்டுப் படுத்தி ஆரோக்கியமாக வாழ முடியும். அதற்கு இன்சுலின் ஊசி தான் ஒரே வழி என்று நினைக்க வேண்டாம். அத்தகைய நீரிழிவை இயற்கை முறையிலும் கட்டுப்படுத்தலாம்.

அதிலும் காய்கறிகளில் வெண்டைக்காயை சாப்பிட்டால், நீரிழிவு கட்டுப்படும்.

#TamilSchoolmychoice

lady_fingre_600x450

நீரிழிவை கட்டுப்படுத்த எப்படி வெண்டைக்காயை பயன்படுத்த வேண்டும்?

இரண்டு வெண்டைக்காய் பிஞ்சுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதன் இரு முனைகளையும் நீக்கிவிட வேண்டும்.

முனைகளை நறுக்கியப்பின் அதிலிருந்து வெள்ளை நிறத்தில் ஒரு திரவம் வரும். அப்போது அதனை கழுவிடாமல் ஒரு டம்ளர் நீரில் அந்த துண்டுகளை போட்டு, இரவில் படுக்கும் முன்பு ஊற வைத்து, மறக்காமல் மூடிவிட வேண்டும். பின் காலையில் எழுந்து அந்த துண்டுகளை நீக்கி, அந்த நீரை குடிக்க வேண்டும்.

இதனை தினமும் காலையில் குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சக்கரை அளவு குறைந்துவிடும். சொல்லப்போனால் வெண்டைக்காயை வேக வைத்து சாப்பிடுவதை விட, இவ்வாறு சாப்பிடுவது தான் சிறந்த பலனைத் தரும்.

ஆகவே வெண்டைக்காயை குழம்பு, பொரியல் என்று சாப்பிடுவதை தவிர்த்து, மேற்கூறியவாறு சாப்பிட்டால் நீரிழிவைக் கட்டுப்படுத்தலாம்.

okra_1_

வெண்டைக்காய் எப்படி நீரிழிவைக் கட்டுப்படுத்தும்?

வெண்டைக்காயில் ‘கிளைசீமிக் இன்டெக்ஸ்’ குறைவாக உள்ளது. ஆகவே இதனை அதிகம் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படுவதோடு, வயிறும் நிறைந்துவிடும்.

நீரிழிவில் டைப்-2 நீரிழிவு என்று ஒன்று உள்ளது. இது சிறுநீரகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

மேலும் இந்த வகையான நீரிழிவு இருந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதோடு, சிறுநீரகத்திற்கும் பாதிப்பை உண்டாக்கும். ஆகவே வெண்டைக்காயை சாப்பிட் டால் சிறுநீரகத்தில் எந்த ஒரு நோயும் வராமல் தடுக்கலாம்.

எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ள உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இந்த சத்து உடலில் இருக்கும்  மாவுச்சத்தின் செரிமான நேரத்தை குறைத்து, அவை இரத்தத்தில் கலக்காமல் தடுக்கிறது.

இத்தகைய சத்து வெண்டைக்காயில் அதிகம் உள்ளது. எனவே வெண்டைக்காயை உணவில் அதிகம் சேர்த்து நீரிழிவைக் கட்டுப்படுத்துங்கள்.