Home கலை உலகம் தனுஷ் படத்துக்கு பாகிஸ்தானில் தடை

தனுஷ் படத்துக்கு பாகிஸ்தானில் தடை

596
0
SHARE
Ad

ஜூலை 7- தனுசின் ராஞ்சனா இந்தி படத்துக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்படம் கடந்த வாரம் வெளியாகி  வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியிடப்பட்டு உள்ளது.

இதில் தனுஷ் ஜோடியாக சோனம் கபூர் நடித்துள்ளார். இந்து முஸ்லிம் காதலை மையமாக வைத்து இப்படத்தை இயக்குனர் ஆனந்த்ராய் எடுத்துள்ளார்.

dhanushகாசியில் வசிக்கும் இந்து இளைஞன் தனுஷ் அதே பகுதியை சேர்ந்த முஸ்லிம் பெண் சோனம்கபூரை சிறு வயதில் இருந்தே காதலிக்கிறார். இதனால் ஏற்படும் பிரச்சினைகளும் காதல் நிறைவேறியதா என்பதும் கதை.

#TamilSchoolmychoice

ராஞ்சனா படத்தை பாகிஸ்தானில் வெளியிட அங்குள்ள தணிக்கை குழுவுக்கு விண்ணப்பிக்கப் பட்டது. படத்தை பாகிஸ்தான் அதிகாரிகள் பார்த்து அனுமதி மறுத்து விட்டனர்.

இந்து இளைஞனை முஸ்லிம் பெண் காதலிப்பது போல் கதை உள்ளதால் படத்துக்கு பாகிஸ்தானில் எதிர்ப்பு கிளம்பும். சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படும். எனவே இப்படத்துக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்படுகிறது என்று தணிக்கை குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

ஏற்கனவே கடந்த வருடம் ஏஜென்ட் வினோத் என்ற இந்தி படத்துக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டது. ஒசாமா பின்லேடன் பற்றிய ஜீரோ டார்க் டர்டி என்ற ஹாலிவுட் படத்துக்கும் தடை விதித்தனர்.