Home இந்தியா த.மு.மு.க. பேரணிக்கு தடை: கருணாநிதி கண்டனம்

த.மு.மு.க. பேரணிக்கு தடை: கருணாநிதி கண்டனம்

531
0
SHARE
Ad

karunanithiசென்னை, ஜூலை 7– தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைமையில் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த இஸ்லாமிய பெருமக்கள், தங்களின் முப்பெரும் கோரிக்கைகள் வெற்றி பெற ஆவன செய்ய வேண்டுமென்று அரசைக் கேட்டுக் கொள்வதற்காக, இன்றைய தினம் சென்னையில் தலைமைச் செயலகத்தை நோக்கி அமைதிப் பேரணி ஒன்றினை நடத்துவதற்குக் கூட அரசு அனுமதி மறுத்துள்ளது.

அ.தி.மு.க. அரசு அண்மைக் காலங்களில் மக்களுக்குரிய சாதாரண அடிப்படை உரிமைகளைக் கூடப் பறிக்கின்ற வகையில் பேரணி நடத்தத் தடை, பொதுக்கூட்டம் நடத்தத்தடை என்றெல்லாம் கடுமையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதை தி.மு.க. சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.