Home அரசியல் தேச நிந்தனைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று யோசனை கூறியவர் பிரதமர் – சுப்ரா கூறுகிறார்

தேச நிந்தனைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று யோசனை கூறியவர் பிரதமர் – சுப்ரா கூறுகிறார்

539
0
SHARE
Ad

subra (1)கோலாலம்பூர், ஜூலை 8 – கடந்த வருடம் தேச நிந்தனைச் சட்டம் 1948 ஐ அரசாங்கம் நீக்க வேண்டும் என்ற யோசனையைக் கூறியவர் பிரதமர் நஜிப் துன் ரசாக் தான் என்று சுகாதாரத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ். சுப்ரமணியம் இன்று தெரிவித்தார்.

மேலும், அச்சட்டத்தை நீக்குவது தொடர்பாக, அமைச்சரவை ஆராய்ந்து ஒரு நல்ல முடிவை எடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சுப்ரா,“இவ்விவகாரம் தொடர்பாக ஆலோசனைகளைக் கூறுவதற்கு பிரதமருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அவர் மீண்டும் இது குறித்து அமைச்சரவையில் விவாதிப்பார்” என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

கடந்த வருடம் ஜூலை மாதம், தேச நிந்தனைச் சட்டத்தை நீக்குவது தொடர்பாக பிரதமர் நஜிப் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி, தேச நிந்தனைச் சட்டம் நீக்க வேண்டுமானால் அதற்குப் பதிலாக மற்றொரு சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.