Home நாடு “தேச நிந்தனைச் சட்டத்தை ரத்து செய்வதாகக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்” – கெராக்கான் வேண்டுகோள்

“தேச நிந்தனைச் சட்டத்தை ரத்து செய்வதாகக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்” – கெராக்கான் வேண்டுகோள்

676
0
SHARE
Ad

imagesகோலாலம்பூர், ஜூலை 9 – தேச நிந்தனைச் சட்டம் 1948 ஐ நீக்குவதாக பிரதமர் நஜிப் துன் ரசாக் அளித்துள்ள வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று கெராக்கான் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

இது குறித்து கெராக்கான் கட்சியின் இடைக்கால தலைவராக இருக்கும் சாங் கோ யூவன் கூறுகையில், “பழமையான மற்றும் ஒடுக்குமுறையான அந்த சட்டம் மறுபதிப்பு செய்யக் கூடாது அல்லது அதை மையமாக வைத்து இன்னொரு புதிய சட்டம் இயற்றப்படக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அச்சட்டத்தை நீக்குவதன் மூலம் இந்த அரசாங்கம், தனது நாட்டு குடிமக்களுக்கு ஒரு பரந்த ஜனநாயகத்தை கொடுக்கும் என்று தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

“பேச்சு சுதந்திரம் தான் ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை. அந்த உரிமையை நடைமுறைப்படுத்த எப்போதும் முயற்சி செய்ய வேண்டும். அவ்வாறு ஒரு விவகாரம் குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் கருத்துக்கள் வந்தால் மட்டுமே இந்த சமுதாயத்தில் நன்மையும், சகிப்புத்தன்மையும் வளரும்” என்றும் சாங் கூறியுள்ளார்.

தேச நிந்தனைச் சட்டத்தை ரத்து செய்வது, மலாய் ஆட்சியாளர்களை அவமானப்படுத்துவது போல் ஆகிவிடும் என்று உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி கூறியிருப்பதை ஏற்றுக்கொள்ள மறுத்த சாங்,“மலாய் ஆட்சியாளர்கள் அவமானப்படுவதைத் தடுக்க குற்றவியல் சட்டத்தில் போதுமான விதிமுறைகள் உள்ளன” என்று தெரிவித்தார்.