கோலாலம்பூர், ஜூலை 10- சீத்தாபழம் நோய் எதிர்ப்பு சக்தியான வைட்டமின்சியை கொண்டிருக்கிறது. இது உடலில் ஏற்படும் நோய்களை அழித்து உடலை ஆரோக்கியத்துடன் பாதுகாத்துக்கொள்ளும் ஆற்றலை கொண்டது.
இதில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் கொண்டுள்ளதால் நமது இதயத்தை இதய நோயிலிருந்து பாதுகாக்கிறது. அதுமட்டுமல்லாமல் நமது உடலில் உள்ள இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்துகிறது.
சீத்தாபழம் எவற்றையெல்லாம் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டுள்ளது என பார்க்கலாம். கர்ப்பகாலத்தில் உள்ளவர்கள் சீத்தாபழம் சாப்பிடலாம். மேலும் கண்பார்வைக்கு, செரிமான பிரச்சனைக்கு, ஆரோக்கியமான இதயத்திற்கு, கீல்வாதம், ரெய்மடிஸ்ம் சிகிச்சைக்கு, சோர்வுடன் போராடும், இரத்தசோகைக்கு, புற்றுநோய் மற்றும் கட்டிகளுக்கு உதவிபுரிகிறது.
இதில் மெக்னீசியத்தின் அளவை அதிகம் கொண்டிருப்பதால் உடலில் நீர் இருப்பு நிலையை பராமரிக்கிறது. இது மூட்டுகளில் இருந்து பல்வேறு அமிலங்களை அகற்றி மூட்டுகளில் ஏற்படும் வாதநோய், கீழ்வாதநோய், மூட்டுவலி, ஆகியவற்றை குறைக்கிறது.
இரத்தசோகை உள்ளவர்கள் சீத்தாபழத்தை சாப்பிட்டால் விரைவான தீர்வு பெறலாம். எடைகுறைவாக உள்ளவர்கள் எடையை அதிகப்படுத்த இப்பழத்தை தினமும் சாப்பிடலாம். சீத்தாபழத்தின் தோல் பற்சிதைவு, ஈறுகளில் ஏற்படும் வலிகளுக்கு உதவியாக உள்ளது. எனவே, சீத்தாபழத்தை சாப்பிட்டு நலமாக வாழ்வோமாக!