Home நாடு கோல பெசுட் இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோல பெசுட் இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பு!

628
0
SHARE
Ad

Azlan@Endut-Yusofபெட்டாலிங் ஜெயா, ஜூலை 10 – கோல பெசுட் இடைத்தேர்தலில் போட்டியிடும் தங்கள் வேட்பாளர்களை பாஸ் கட்சியும், தேசிய முன்னணியும் நேற்று அறிவித்தன.

பாஸ் வேட்பாளராக அஸ்லான் (என்ற) எண்டுட் யூசோப் (வயது 46) (படம் – இடது) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கட்டுமான தொழிலில் ஒப்பந்ததாரராக இருப்பதோடு, அத்தொகுதி பாஸ் கிளையின் பொருளாளராகவும் இருந்து வருகிறார்.

நேற்று இரவு கோல பெசுட் தொகுதியில் உள்ள கம்போங் நெயில் பகுதியில், பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ ஹாடி அவாங் இந்த அறிவிப்பை செய்ததாக  ‘சினார் ஹரியான்’ பத்திரிக்கை கூறுகிறது.51373369977_295x200

#TamilSchoolmychoice

அதே நேரத்தில், தேசிய முன்னணியும் தங்களது வேட்பாளரை நேற்று அறிவித்தது.

அதன்படி, தெங்கு ஜைஹான் செகு அப்துல் ரஹ்மான் (வயது 37) (படம்- வலது), கோல பெசுட் தொகுதியில் போட்டியிடும் தேசிய முன்னணி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கோல பெசுட் தொகுதியைச் சேர்ந்தவரான இவர், வடிகாலமைப்பு மற்றும் நீர் பாசன துறையில் பொறியியலாளராகப் பணியாற்றி வருகிறார்.