Home 13வது பொதுத் தேர்தல் வாக்காளர்கள் இனி விரலை மையில் தோய்த்தெடுக்க வேண்டும் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வாக்காளர்கள் இனி விரலை மையில் தோய்த்தெடுக்க வேண்டும் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

584
0
SHARE
Ad

ecகோலாலம்பூர், ஜூலை 10 – கோல பெசுட் இடைத்தேர்தலில், வாக்காளர்கள் அனைவரும் தங்களது இடது கையின் ஆள்காட்டி விரலை, அழியாமையில் தோய்த்து எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜீஸ் முகமட் யூசோப் (படம்) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வாக்காளர்களுக்கு 13 வது பொதுத்தேர்தலில் மையை இடுவதில் பயன்படுத்திய முறையை, வரும் இடைத்தேர்தலில் பயன்படுத்தப்போவதில்லை. வாக்காளர்கள் இருமுறை வாக்களிப்பதைத் தடுக்கும் வகையில், அவர்களது இடது கையின் ஆள்காட்டி விரலை மையில் தோய்த்து எடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இருப்பினும், தேர்தல் ஆணையம் வாக்காளர்களின் அடையாள அட்டையையும் சோதனை செய்து அவர்கள் ஏற்கனவே வாக்களித்துள்ளார்களா என்பதையும் உறுதி செய்யும். இதனால் வாக்காளர்கள் இருமுறை வாக்களிப்பதையும், போலி வாக்காளர்களையும் தடுக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இதனிடையே,  இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் ஜூலை 12 ஆம் தேதி, கம்போங் ராஜா பெசுட்டில் உள்ள ராக்கான் மூடா வளாகத்தில், காலை 9 மணி தொடங்கி 10 மணி வரை நடைபெறும் என்றும் அப்துல் அஜீஸ் அறிவித்துள்ளார்.

அதோடு, தேர்தல் பிரச்சாரங்களை கவனிக்க தேர்தல் ஆணையம் குழு ஒன்றை அமைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோல பெசுட் சட்டமன்ற உறுப்பினரான ரஹ்மான் மொஹ்தார் கடந்த ஜூன் 26 ஆம் தேதி நுரையீரல் புற்றுநோய் காரணமாக மரணமடைந்ததைத் தொடர்ந்து அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.

வரும் ஜூலை 12 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட பிறகு, ஜூலை 20 ஆம் தேதி முன்கூட்டிய வாக்களிப்பும், ஜூலை 24 ஆம் தேதி இடைத்தேர்தலும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேற்று பாஸ் கட்சியும், தேசிய முன்னணியும் இடைத்தேர்தலில் போட்டியிடும் தங்கள் வேட்பாளர்களின் பெயரை அறிவித்துள்ளது. பாஸ் வேட்பாளராக அஸ்லான் (என்ற) எண்டுட் யூசோப்பும்,  தேசிய முன்னணி வேட்பாளராக தெங்கு ஜைஹான் செகு அப்துல் ரஹ்மானும் களமிறங்கவுள்ளனர்.