Home வணிகம்/தொழில் நுட்பம் இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்றம்

இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்றம்

545
0
SHARE
Ad

மும்பை, ஜூலை 10- அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பில் இன்று (ஜூலை 10ம் தேதி) 13 காசுகள் ஏற்றம் காணப்படுகிறது.

rupeeமுன்னதாக நேற்று 47 காசுகள் உயர்வுடன் ரூ.60.14-ஆக முடிந்த இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை வர்த்தக நேர துவக்கத்தில் 13 காசுகள் உயர்ந்து ரூ.60.01-ஆக இருந்தது.

ஏற்றுமதியாளர்கள் அதிகளவு அமெரிக்க டாலரை விற்பனை செய்து வருவது, உள்நாட்டு சந்தையில் காணப்படும் ஏற்றம் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப அன்றாடம் ஒரு பொதுத்துறை வங்கிகளிடம் டாலரை வாங்கிக்கொள்ளலாம் என்று  ரிசர்வ் வங்கி அறிவித்தது போன்ற காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பில் இரு தினங்களாக ஏற்றம் காணப்படுவதாக அந்நிய செலவாணி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.