லண்டன், ஜூலை 13- இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டன்னுக்கு இன்று பிரசவ தேதி குறிக்கப்பட்டுள்ளது.
பிரசவத்தின் போது மனைவியின் அருகில் துணையாக இருப்பதற்காக கடற்படையின் ஹெலிகாப்டர் விமானி பணிக்கு விடுமுறை போட்டுவிட்டு இளவரசர் வில்லியம் லண்டன் விரைந்துள்ளார்.
1990-ம் ஆண்டு முதல் இங்கிலாந்து ராணியின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு பிரசவம் பார்த்த மகப்பேறு மருத்துவர் மார்கஸ் செட்செல் (வயது 70), கேட் மிடில்டன்னுக்கும் பிரசவம் பார்க்க உள்ளார்.
கார் விபத்தில் மரணமடைந்த இங்கிலாந்து இளவரசி டயானாவும் இதே புனித மேரி மருத்துவமனையில் தான் இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரியை ஈன்றெடுத்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
Comments