Home நாடு “தடுப்புக்காவல் சட்டத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை” – அப்துல் கனி

“தடுப்புக்காவல் சட்டத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை” – அப்துல் கனி

522
0
SHARE
Ad

ganipatail540px_1கோலாலம்பூர், ஜூலை 16 – சந்தேகத்திற்குரிய நபர்களை தடுப்புக்காவலில் வைக்க வகை செய்யும் எந்த ஒரு புதிய சட்டத்திற்கும் தான் ஆதரவு தரப்போவதில்லை என்று சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேல்(படம்) கூறியுள்ளார்.

இருப்பினும், இதுவரை அவசரகால சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டம் கொண்டு வருவது குறித்து உள்துறை அமைச்சகத்தில் இருந்தோ அல்லது அரசாங்கத்தின் மற்ற பிரிவுகளிலிருந்தோ எந்த ஒரு வரைவோ அல்லது கோரிக்கையோ வரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

“தடுப்புக்காவலில் வைக்கப்படுவதை நான் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன். இது குறித்து எந்த ஒரு வரைவும் இதுவரை என் அலுவலகத்திற்கு வரவில்லை. என்னைப் பொறுத்தவரை தடுப்புக்காவல் குறித்த எனது முடிவை தெளிவாகக் கூறிவிட்டேன்” என்று பாங்கியில் இன்று செய்தியாளர்களிடம் அப்துல் கனி கூறினார்.

#TamilSchoolmychoice

மேலும், குற்றவாளிகளைக் கண்டறிந்து நீதி வழங்க இதுவரை இருக்கும் சட்டங்களே போதுமானது என்றும், இது போன்ற தடுப்புக்காவல் சட்டங்களின் மூலம் ஒரு நிரபராதி கூட சிறை தண்டனை பெற்றுவிடக்கூடாது என்றும் அப்துல் கனி வலியுறுத்தினார்.

“குற்றங்களைத் தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தேவையான அனைத்து சட்டங்களும் நடைமுறையில் உள்ளது. அதன் மூலம் அவர்கள் குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை பெற்றுத் தரலாம் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்று அப்துல் கனி உறுதியளித்தார்.