Home வணிகம்/தொழில் நுட்பம் மோட்டார் வாகன துறையில் பின்தங்குகிறது இந்தியா – இந்தோனேஷியா, தாய்லாந்து நாடுகள் முந்துகின்றன

மோட்டார் வாகன துறையில் பின்தங்குகிறது இந்தியா – இந்தோனேஷியா, தாய்லாந்து நாடுகள் முந்துகின்றன

537
0
SHARE
Ad

imagesமும்பை, ஜூலை 16 – ஆசியாவின் மிகப் பெரிய மோட்டார் வாகனச் சந்தை என்ற சிறப்பை பெற்றுள்ள இந்தியா, வரும் ஆண்டுகளில் இந்தோனேஷியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிடம் அத்தகுதியை இழக்கும் சூழல் உருவாகி வருகிறது.இந்திய மோட்டார் வாகனச் சந்தையின் மந்தமான வளர்ச்சி, அதிக வட்டி விகிதம், கார் விற்பனையை ஊக்குவிக்க, அரசு சலுகை அளிக்காதது போன்றவற்றால், சர்வதேச வாகன தயாரிப்பு நிறுவனங்கள், இந்தியாவில் முதலீடு செய்வதை குறைக்கத் துவங்கியுள்ளன.

அதே சமயம், தாய்லாந்து, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில், கார் விற்பனையை அதிகரிக்க, அந்நாட்டு அரசுகள், பல்வேறு சலுகைகளை வழங்குகின்றன. மேலும், வாகனக் கடனுக்கான வட்டி விகிதம், மிகக் குறைவாக, ஒற்றை இலக்கத்தில் உள்ளது.இதனால், மேற்கண்ட நாடுகளில், பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்கள், புதிய தொழிற்சாலைகள் அமைக்கவும், விரிவாக்கத் திட்டங்களை மேற்கொள்ளவும், அதிக அளவில் முதலீடுகளை செய்து வருகின்றன.

இந்தியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படும் சென்னையில், உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள், தொழிற்சாலைகளை அமைத்து உள்ளன. அது போன்று, உள்நாட்டு நிறுவனங்களும், நாட்டின் முக்கிய நகரங்களில், வாகனத் தொழிற்சாலையைக் கொண்டு உள்ளன.

#TamilSchoolmychoice

சர்வதேச பொருளாதார மந்தநிலையின் தாக்கத்தால், இந்தியாவின் தொழில் வளர்ச்சி மந்தமடைந்து உள்ளது. இதன் எதிரொலியாக, கடந்த, எட்டு மாதங்களாக, வாகனத் துறையின் விற்பனை வளர்ச்சி, சுணக்கம் கண்டுள்ளது.

இத்தகைய போக்கால், இந்தியாவில் உள்ள பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்கள், ஏற்றுமதியை குறி வைத்து, உற்பத்தி திறனை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளன.இந்நிறுவனங்கள், இந்தியாவில் நிலவும் சாதகமற்ற சூழல் காரணமாக, இந்தோனேஷியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில், புதிய தொழிற்சாலைகளை அமைக்கவும், விரிவாக்க திட்டங்களை மேற்கொள்ளவும் முடிவு செய்து உள்ளன.