Home அரசியல் கோல பெசுட் இடைத்தேர்தலில் தே.மு தோல்வியடைந்தால் அது நஜிப்பின் பதவியையே பாதிக்கலாம் – கைரி

கோல பெசுட் இடைத்தேர்தலில் தே.மு தோல்வியடைந்தால் அது நஜிப்பின் பதவியையே பாதிக்கலாம் – கைரி

575
0
SHARE
Ad

khairyjamaluddin540px

கோல பெசுட், ஜூலை 18 – கோல பெசுட் இடைத்தேர்தலில் தேசிய முன்னணி தோல்வியடைந்தால் அது பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் பதவிக்கே ஆபத்தாக அமையும் என்று இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுதீன் வாக்காளர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

கோல பெசுட்டில் உள்ள கம்போங் பாரு என்ற இடத்தில் பொதுமக்கள் முன் உரையாற்றிய கைரி, “வரும் ஜூலை 24 ஆம் தேதி நடைபெறவுள்ள கோலபெசுட் இடைத்தேர்தல் ஒருவேளை தேசிய முன்னணி தோல்வியுற்றால், திரங்கானு மாநில சட்டமன்றத்தில் தொங்கு நிலை ஏற்படும். இதன் காரணமாக திரங்கானு மாநிலத்தில் மறுதேர்தல் கூட நடக்கலாம். அதன்பிறகு, தேசிய முன்னணியின் நிலை, பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் நிலை ஆகியவை அச்சப்படும் படியாக அமையலாம்” என்று கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், கோல பெசுட் தொகுதியில் மறைந்த டாக்டர் ரஹ்மான் மொஹ்தார்  செய்த சேவைகள் அனைத்தும், மீண்டும் தொடரும் என்றும், தேசிய முன்னணி முன்பை விட கூடுதலாக இத்தொகுதியில் கவனம் செலுத்தும் என்று தான் வாக்குறுதி அளிப்பதாகவும் கைரி தெரிவித்தார்.