Home கலை உலகம் டுவிட்டரில் நடிகைகள் பற்றி அவதூறு: நடிகை குஷ்பு ஆவேசம்

டுவிட்டரில் நடிகைகள் பற்றி அவதூறு: நடிகை குஷ்பு ஆவேசம்

626
0
SHARE
Ad

நடிகைகள் பற்றி டுவிட்டரில் ஒருவர் அவதூறு செய்தி வெளியிட்டு இருந்தார். பணத்துக்காக நடிகைகள் தவறாக நடப்பதாக அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கு டுவிட்டரில் நடிகை குஷ்பு கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் கூறியிருப்பதாவது:–

r562218_3407840நடிகைகள் பற்றி அந்த நபர் அவதூறாக கருத்து பதிவு செய்து இருப்பது வருத்தம் அளிக்கிறது. விபசார தரகராக இருப்பவர்தான் இது போல் பேச முடியும்.

இதுபோன்று நடிகைகள் பற்றி அவதூறு பரப்புபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். இது போன்ற பிள்ளையை பெற்றதற்காக பெற்றோர் நிச்சயம் வருத்தப்படுவார்கள்.

#TamilSchoolmychoice

பெண்களை உயர்வாக மதித்து நிறைய ஆண்கள் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். இது எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.

சினிமா பின்னணி பாடகி சின்மயியும் நடிகைகள் பற்றி டுவிட்டரில் வெளியாள அவதூறுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.