Home நாடு சபா அடையாள அட்டை விவகாரத்தில் தனக்கு தொடர்பு இல்லை – மூசா அமான் மறுப்பு

சபா அடையாள அட்டை விவகாரத்தில் தனக்கு தொடர்பு இல்லை – மூசா அமான் மறுப்பு

740
0
SHARE
Ad

mole-RCI-SABAH-2சபா, ஜூலை 23 – சபா அடையாள அட்டை விவகாரத்தில் தனக்கு எந்த வித சம்பந்தமும் இல்லை என்று சபா மாநில முதல் அமைச்சர் மூசா அமான் அரச விசாரணை ஆணையத்திடம் கூறியுள்ளார்.

இது குறித்து இன்று கோத்தா கினபாலுவில் உள்ள அரச விசாரணை ஆணையத்திடம் மூசா அம்மானின் வழக்கறிஞர் ரோட்ரிக் பெர்னாண்டஸ் கூறுகையில், “கடந்த வாரம் வியாழக்கிழமை டாக்டர் சோங் எங் லியாங், சபா அடையாள அட்டை விவகாரத்தில் எனது கட்சிக்காரருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறியுள்ளார். ஆனால் மூசா அம்மான் இக்குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

பார்டி பெர்சத்து சபா (PBS) என்ற கட்சியின் முன்னாள் அரசியல்வாதியான டாக்டர் சொங் எங் லியாங் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 1991 ஆம் ஆண்டு வெளிநாட்டவர்களுக்கு அடையாள அட்டை கொடுத்து அவர்களை அம்னோ உறுப்பினர்களாக்கும் குழுவிற்கு மூசா தலைமை வகித்தார் என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.