Home நாடு சபா அடையாள அட்டை விவகாரத்தில் மூசா அம்மானுக்கு தொடர்பு – ஆர்.சி.ஐ

சபா அடையாள அட்டை விவகாரத்தில் மூசா அம்மானுக்கு தொடர்பு – ஆர்.சி.ஐ

627
0
SHARE
Ad

musa-amanசபா, ஜூலை 18 – சபா அடையாள அட்டை விவகாரத்தில் சபா முதல்வர் மூசா அம்மானுக்கு தொடர்பு இருப்பதாக அரச விசாரணை ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.

பார்டி பெர்சத்து சபா (PBS) என்ற கட்சியின் முன்னாள் அரசியல்வாதியான டாக்டர் சொங் எங் லியாங் இது குறித்து கூறுகையில், கடந்த 1991 ஆம் ஆண்டு வெளிநாட்டவர்களுக்கு அடையாள அட்டை கொடுத்து அவர்களை அம்னோ உறுப்பினர்களாக்கும் குழுவிற்கு மூசா தலைமை வகித்தார் என்று தெரிவித்துள்ளார்.

“அம்னோ சபா மாநிலத்தில் அடி எடுத்து வைத்தபோது, இந்த குழு அமைக்கப்பட்டது, அக்குழுவிற்கு மூசா தலைமை தாங்கினார்” என்று சொங் இன்று விசாரணையில் கூறினார்.

#TamilSchoolmychoice

அதே போல்,எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியான ஜெப்ரி கிட்டிங்கன் இதே போன்று ஒரு தகவலை நேற்று நடந்த விசாரணையில் தெரிவித்துள்ளார்.

அதோடு, சபா மாநிலத்தில் இஸ்லாம் மதத்தினரை அதிகரிப்பதாகவும் சோங் கூறியுள்ளார்.