கோல பெசுட், ஜூலை 18 – கோல பெசுட் இடைத்தேர்தலில் பயன்படுத்தப்போகும் அழியா மையின் தரத்தை நிரூபிக்கும் ஒரு சோதனையை தேர்தல் ஆணையம் இன்று நடத்தியது.
அதில் ஏராளமான பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.
“விரலில் இடப்பட்ட அந்த அழியா மை கழுவினாலும் அதன் நிறம் மாறாமல் இருப்பது உறுதியாகியுள்ளது” என்று தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜீஸ் முகமட் யூசுப் அந்த சோதனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த சோதனை கோல பெசுட் தொகுதியில் உள்ள நில அலுவலகத்தில் வைத்து நடத்தப்பட்டது.
மேலும், கருஞ்சிவப்பு நிறத்திலுள்ள இந்த மையில் வாக்காளர்கள் தங்களது இடது கையில் ஆள்காட்டி விரலை நனைக்க வேண்டும். அதோடு தங்களது வலது கையில் வாக்குச்சீட்டுக்களை பிடித்திருக்க வேண்டும் என்று சோதனையின் போது கூறப்பட்டது.