Home நாடு சாஹிட்டுக்கு எதிரான வழக்கை தொழிலதிபர் வாபஸ் வாங்கினார்!

சாஹிட்டுக்கு எதிரான வழக்கை தொழிலதிபர் வாபஸ் வாங்கினார்!

597
0
SHARE
Ad

zahidகோலாலம்பூர், ஜூலை 18 – உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி தன்னைத் தாக்கியதாக பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கில், தான் கோரியிருந்த இழப்பீடுகளை மீட்டுக் கொள்ள தொழிலதிபர் அமீர் பஸ்லி  அப்துல்லா ஒப்புக்கொண்டுள்ளார்.

அதே போல், சாஹிட்டும் அமீருக்கு எதிராக கோரியிருந்த இழப்பீடுகளை மீட்டுக்கொள்ள முன்வந்துள்ளார்.

ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தில் இன்று ஒரு மணி நேரத்துக்கு மேல் நடந்த இந்த விவாதத்திற்குப் பிறகு இரு தரப்பினரும் சுமூகத் தீர்வுக்கு வந்துள்ளனர்.

#TamilSchoolmychoice

சாஹிட் சார்பில் வழக்கறிஞர் சம்சுல் பாஹ்ரெய்னும், அமீர் பஸ்லி  சார்பில் கர்பால் சிங்கும் இவ்வழக்கில் ஆஜராயினர்.

சம்சுல் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், இரு தரப்புகளும் சுமூகத் தீர்வுக்கு முன்வந்துள்ளனர். இவ்வழக்கு தொடர்பான விசாரணை அடுத்த மாதம் நடக்கவுள்ளது என்று தெரிவித்தார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு அகமட் சாஹிட் தன்னைத் தாக்கியதாக அமீர் வழக்கு தொடுத்தார்.

ஆனால், அந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கடந்த மாதம் ஸாஹிட் கொடுத்த விண்ணப்பத்தை  கூட்டரசு நீதிமன்றம் மறுத்து, அந்த வழக்கு விசாரணைக்கு செல்ல வேண்டும்  என்று உத்தரவிட்டது.