Home உலகம் கேட் மிடில்டன் குழந்தையுடன் வீடு திரும்பினார்: குட்டி இளவரசனை புகைப்படம் எடுக்க போட்டா போட்டி

கேட் மிடில்டன் குழந்தையுடன் வீடு திரும்பினார்: குட்டி இளவரசனை புகைப்படம் எடுக்க போட்டா போட்டி

628
0
SHARE
Ad

லண்டன், ஜூலை 24– இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்–டயானா தம்பதியின் மூத்த மகன் இளவரசர் வில்லியம். இவரது மனைவி இளவரசி கேத் மிடில்டன் ( வயது 31). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன் தினம் பிரசவ வலி ஏற்பட்டது.

APTOPIX Britain Royal Babyநேற்று காலை அவர் மேற்கு லண்டனில் பட்டிங்டனில் உள்ள செயின்ட் மேரீஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முன்னதாக அரண்மனையில் இருந்து அவர் கார் மூலம் அழைத்து செல்லபட்ட போது கணவர் இளவரசர் வில்லியமும் உடன் சென்றார்.

செயின்ட் மேரீஸ் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்ட கேத் மிடில்டனிற்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறப்பு பற்றிய செய்தி தெரிய வந்தவுடன் பிரிட்டன் மக்கள் உற்சாக கொண்டாட்டத்தில் திளைத்தனர். 41 குண்டுகள் முழங்க புதிய இளவரசருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

பிரசவத்துக்கு பின்னர் ஒரு நாள் மருத்துவமனையில்  தங்கியிருந்த கேட் மிடில்டன் தனது மகனுடன் நேற்று வீடு திரும்பினார்.

கணவர் வில்லியம் உடன் புனித மேரி மருத்துவமனையை விட்டு அவர் வெளியே வந்ததும் பட்டத்துக்குரிய தங்களது குட்டி இளவரசனின் முகத்தை காணவும், வரவேற்று வாழ்த்தவும்  மருத்துவமனி வாசலில் ஏராளமான மக்கள் குவிந்தனர்.

நூற்றுக்கணக்கான புகைப்பட நிருபர்கள் ராஜவம்சத்தின் புதிய வாரிசை தங்களது புகைப்பட கருவியில் சிறைபடுத்தி விடவேண்டும் என்ற ஆர்வத்தில் ஒருவரையொருவர் முந்தியடித்து பாய முயன்றனர்.

kate-middleton-prince-william-royal-baby-crop-4இந்த காட்சிகளை கண்ட கேட் மிடில்டன், மக்களின் அன்பு பெருக்கை கண்டு உணர்ச்சிவசப்பட்டு நெகிழ்ச்சி அடைந்ததாக கூறி குழந்தையை இளவரசர் வில்லியம் கையில் கொடுத்தார்.

லாவகமாக மகனை கரங்களில் ஏந்திக்கொண்ட இளவரசர் வில்லியம் குதூகலத்துடன் புகைப்படங்களுக்கு ‘காட்சி’ கொடுத்து பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு குஷியுடன் பதில் அளித்தார்.

மகனின் முடி பற்றி கேள்விக்கு பதிலளித்த அவர், என்னைவிட அவனுக்கு அதிகமாக உள்ளது என்றும், என் மகன் பெரிய பையன், மிகவும் கனமாக இருக்கிறான், அச்சு அசலாக அம்மா சாயலில் பிறந்திருக்கிறான் என்றும் பதில் அளித்த வில்லியம், மனைவி மற்றும் மகனை காரில் ஏற்றிக்கொண்டு கென்சிங்டன் அரண்மனை நோக்கி சென்றார்.