Home கலை உலகம் ‘பிரியாணி’ பரிமாற தயார்!

‘பிரியாணி’ பரிமாற தயார்!

573
0
SHARE
Ad

‘மங்காத்தா’ வெற்றிக்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கும் படம் ‘பிரியாணி’.

Biriyani-Movie-Stills-Photos-Gallery (2)இப்படத்தில் நடிகர் கார்த்தி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஹன்சிகா மொத்வானி நடிக்கிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இது அவருக்கு 100-வது படமாகும். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார்.

#TamilSchoolmychoice

Biriyani-Movie-Stills-Photos-Gallery (5)வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் வித்தியாசமாக தயாராகிவரும் ‘பிரியாணி’யை பரிமாறும் நேரம் தயாராகிவிட்டது. ஆம், பிரியாணி படத்தை வருகிற செப்டம்பர் மாதம் 6-ந் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.

‘பிரியாணி’ படத்தின் புகைப்படங்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவை பெற்றது. ஆகையால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிமாக்கியுள்ளது.