Home அரசியல் “தேசிய முன்னணி வெற்றிக்குக் காரணமான வாக்காளர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்” – நஜிப்

“தேசிய முன்னணி வெற்றிக்குக் காரணமான வாக்காளர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்” – நஜிப்

443
0
SHARE
Ad

najib-razak1-may6கோலாலம்பூர், ஜூலை 25 – நேற்று நடைபெற்ற கோல பெசுட் இடைத்தேர்தலில், தேசிய முன்னணிக்கு வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் பிரதமர் நஜிப் துன் ரசாக் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

அதோடு, பிரதமரின் சமூக வலைத்தளமான டிவிட்டர் மற்றும் முகநூல் போன்றவற்றில், கோல பெசுட் தொகுதியைத் தக்க வைக்க உதவிய தனது கட்சியினருக்கும் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

“கோல பெசுட்டில் வெற்றியடைந்த தேசிய முன்னணிக்கும், வேட்பாளர் தெங்கு ஜைஹான் செ கு விற்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதே நேரத்தில் தேசிய முன்னணியின் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் ஆட்சியமைக்க வாக்காளர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்” என்றும் நஜிப் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

நேற்று வெளியிடப்பட்ட இடைத்தேர்தல் முடிவின் படி, தெங்கு ஜைஹான் செகு அப்துல் ரஹ்மான் 8288 வாக்குகள் பெற்று பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அஸ்லான் 5696 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.