Home கலை உலகம் நான் இன்னொரு முறை காதலிக்கவே மாட்டேன்: நயன்தாரா

நான் இன்னொரு முறை காதலிக்கவே மாட்டேன்: நயன்தாரா

852
0
SHARE
Ad

ஜூலை 27- நயன்தாரா இரண்டு முறை காதலில் தோல்வி அடைந்தார். முதலில் சிம்புவை விரும்பினார். அது முறிந்தது.

பிறகு பிரபுதேவாவுடன் காதல் வயப்பட்டார். இந்த காதலுக்காக மதம் மாறினார். பிரபு தேவாவும் முதல் மனைவியை விவாகரத்து செய்ததால் இருவரும் திருமணம் வரை வந்து பிறகு பிரிந்து விட்டனர்.

vallavan_42இதற்கான காரணத்தை இதுவரை இருவரும் அறிவிக்கவில்லை. தற்போது நயன்தாரா மீண்டும் நடிக்க வந்துள்ளார். தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கிறார். ஐதராபாத்தில் நயன்தாரா அளித்த பேட்டி வருமாறு:-

#TamilSchoolmychoice

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளேன். சினிமாவில் இருந்து சில காலம் ஒதுங்கி விட்டு மீண்டும் வந்தால் அவர்களுக்கு வரவேற்பு இருக்காது. ஆனால் எனக்கு அப்படி இல்லை.

ஆரம்பத்தில் எப்படி மரியாதை இருந்ததோ அது இப்போதும் கிடைத்துள்ளது. எந்த பின்னடைவும் இல்லை. முன்பை விட ஓய்வில்லாமல் இருக்கிறேன். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

WWW.TAMILKEy.COMதெலுங்கில் அனாமிகா படத்தில் நடிக்கிறேன். தமிழிலும் இரண்டு படங்கள் கைவசம் உள்ளன. நல்ல கேரக்டர்களில் நடிக்கிறேன். தனியாக இருப்பது எனக்கு சந்தோஷத்தை கொடுக்கிறது.

இன்னொரு முறை என் வாழ்க்கையில் நான் காதலில் விழ வாய்ப்பே இல்லை. என் வாழ்க்கையை எப்படி அமைத்து கொள்ள வேண்டும் என்பதில் முழு சுதந்திரம் இருக்கிறது.

அந்த சுதந்திரத்தை எப்போதும் இழக்க மாட்டேன். இவ்வாறு நயன்தாரா கூறினார்.