Home அரசியல் ம.இ.கா தேசியத் தலைவர் தேர்தல் – சுப்ரா இன்று பினாங்கு கிளைத்தலைவர்களைச் சந்திக்கிறார்!

ம.இ.கா தேசியத் தலைவர் தேர்தல் – சுப்ரா இன்று பினாங்கு கிளைத்தலைவர்களைச் சந்திக்கிறார்!

627
0
SHARE
Ad

DR-SUBRAகோலாலம்பூர், ஜூலை 29 – எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி நடக்கவிருக்கும் ம.இ.கா தேசியத் தலைவருக்கான தேர்தலில், அக்கட்சியின் நடப்பு தேசியத் தலைவர் டத்தோ ஜி.பழனிவேலை எதிர்த்து நடப்பு தேசியத் துணைத்தலைவரான டாக்டர் டத்தோ எஸ்.சுப்ரமணியம் போட்டியிடவிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

அதன் படி, இன்று மாலை பினாங்கு மாநில ம.இ.கா கிளைத்தலைவர்களை சுப்ரா சந்திக்கவிருக்கிறார் என்று ம.இ.கா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், பினாங்கு மாநில ம.இ.கா தலைமைத்துவம், ம.இ.கா கிளைத்தலைவர்களை இந்த சந்திப்பில் கலந்துகொள்ள வேண்டாம் என்று தடை விதித்திருப்பதாகத் தெரிகிறது.

#TamilSchoolmychoice

காரணம் பினாங்கு மாநில ம.இ.கா தலைவராக வழக்கறிஞரும், பாகான் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா சார்பாக போட்டியிட்டு தோல்வி கண்டவருமான கருப்பண்ணன் சமீபத்தில் தான் பழனிவேலால் நியமிக்கப்பட்டார்.

ஆனாலும், பினாங்கு மாநில ம.இ.கா கிளைத்தலைவர்கள் பலர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டு சுப்ராவிற்கு ஆதரவு தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.