Home அரசியல் “அந்த அடாவடி காவல்துறை அதிகாரியை தற்காக்க வேண்டாம்” – சாஹிட் மீது அன்வார் சாடல்

“அந்த அடாவடி காவல்துறை அதிகாரியை தற்காக்க வேண்டாம்” – சாஹிட் மீது அன்வார் சாடல்

543
0
SHARE
Ad

p1 pix shot _c782756_13728_615

கோலாலம்பூர், ஜூலை 29 – குற்ற தடுப்பு ஆர்வலர் சஞ்சீவன் சுடப்பட்டது தொடர்பில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் அடாவடி காவல்துறை அதிகாரியை, உள்துறை அமைச்சர் சாகிட் தற்காக்க வேண்டாம் என்று எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் சாடியுள்ளார்.

“இவ்விவகாரத்தில் காவல்துறையை விசாரணை செய்ய சாஹிட் முதலில் அனுமதிக்க வேண்டும். விசாரணை செய்யாமல் நீங்களாக எதையும் யூகிக்கக் கூடாது. அம்னோ தலைவர்களிடம் இது தான் பிரச்சனை” என்று அன்வார் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், “ஒரு நல்ல அமைச்சராக இருந்தால் தனது ஊழியர்களைப் பாதுகாக்க வேண்டும். அதை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் இதையே காரணமாக வைத்து ஒரு அடாவடி அதிகாரியை பாதுகாக்கக் கூடாது” என்று அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு, சஞ்சீவன் சிலரால் அச்சுறுத்தப்பட்டுள்ளார். இது குறித்து முழுமையான காவல்துறை விசாரணை தேவை என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.

தான் எல்லா காவல்துறை அதிகாரிகளும் கறை படிந்தவர்கள் என்று கூறவில்லை என்று குறிப்பிட்ட அன்வார், தேசிய காவல் துறைத் தலைவர் காலிட் அபு பக்கர் கொடுத்த வாக்குறுதிப் படி உடனடியாக விசாரணையைத் தொடங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

“இது மிகவும் நியாயமற்றது”

இதனிடையே, சஞ்சீவன் தனக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் குறித்து காவல்துறையில் புகார் அளிக்கவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளதை அன்வார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

“இது மிகவும் நியாயமற்றது. இது ஒரு கொலை முயற்சி, சஞ்சீவன் சுடப்படுவதற்கு சில மணி நேரங்கள் முன்பாக அவர் டிவீட்டரில் (twitter) கூறியவையே ஆதாரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போது காவல்துறைக்கு சென்று புகார் அளிக்க நேரம் இருந்திருக்காது” என்று அன்வார் கூறியுள்ளார்.

மேலும், “இது பொதுவாக சொன்ன செய்தி. இதை வைத்து நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். ஒருவர் நாளை உங்களை சுடப்போவதாகக் கூறினால், காவல்துறையில் புகார் அளிக்கும் வரை பொறுமையாக இருப்பீர்களா?” என்றும் அன்வார் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதோடு, கொடிய குற்றவாளிகளுக்கும், சில அடாவடி காவல்துறையினருக்கும் இடையே சஞ்சீவன் மிகவும் தைரியமாக செயல்பட்டுள்ளார் என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.