Home அரசியல் சுப்ராவின் நிகழ்வைப் புறக்கணிக்கவில்லை – பினாங்கு ம.இ.கா தலைவர் மறுப்பு

சுப்ராவின் நிகழ்வைப் புறக்கணிக்கவில்லை – பினாங்கு ம.இ.கா தலைவர் மறுப்பு

561
0
SHARE
Ad

SUBRAகோலாலம்பூர், ஜூலை 30 – பினாங்கு மாநிலம் புக்கிட் ஜம்புலில், நேற்று இரவு ம.இ.கா தேசிய துணைத்தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியத்தால் நடத்தப்பட்ட மாநில ம.இ.கா கிளைத்தலைவர்கள் சந்திப்பில், அம்மாநில ம.இ.கா தலைவரான எஸ்.கருப்பண்ணன் கலந்து கொள்ளாமல் தவிர்த்துள்ளார்.

இந்நிகழ்வைப் புறக்கணித்ததன் காரணம் குறித்து கருப்பண்ணனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, பதிலளிக்க மறுத்த அவர், தான் அந்த நிகழ்வில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று ஏற்கனவே சுப்ராவிடம் கூறிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி நடக்கவிருக்கும் ம.இ.கா தேசியத் தலைவருக்கான தேர்தலில், அக்கட்சியின் நடப்பு தேசியத் தலைவர் டத்தோ ஜி.பழனிவேலை எதிர்த்து நடப்பு தேசியத் துணைத்தலைவரான டாக்டர் டத்தோ எஸ்.சுப்ரமணியம் போட்டியிடுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

இதன் காரணமாக, தற்போது ம.இ.கா வட்டாரங்களிலும் பரபரப்பிற்கு பஞ்சமின்றி பல ஆரூடங்கள் வெளிவருகின்றன.

கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு விடக்கூடாது என்ற காரணத்தினால் தான், சுப்ரா ஏற்பாடு செய்திருந்த விருந்தில் கிளைத்தலைவர்கள் மற்றும் கிளை உறுப்பினர்கள் கலந்துகொள்ள வேண்டாம் என்று பல நாட்களுக்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டுவிட்டது என்று பினாங்கு மாநில ம.இ.கா கிளைத்தலைவர் ஒருவர் கூறினார்.

இருப்பினும், மொத்தமுள்ள 274 கிளைகளில், 180 கிளைகளைச் சேர்ந்தவர்கள் தடையையும் மீறி அவ்விருந்தில் கலந்து கொண்டுள்ளனர்.

ஆனால் தனக்கு ஆதரவு தேடும் நோக்கில் தான் சுப்ரா இந்த விருந்திற்கு ஏற்பாடு செய்தார் என்ற கருத்தை பினாங்கு மாநில முன்னாள் ம.இ.கா இடைக்கால தலைவரான எல்.கிருஷ்ணன் மறுத்துள்ளார்.

“கட்சியின் தேசியத் துணைத்தலைவர் என்ற முறையில் விருந்தில் கலந்து கொண்டு உறுப்பினர்களைச் சந்திப்பதில் எந்த தவறும் இல்லை” என்றும் கிருஷ்ணன் கூறியுள்ளார்.