Home 13வது பொதுத் தேர்தல் சிலாங்கூர் மாநிலத்தில் நான்கு தேர்தல் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன!

சிலாங்கூர் மாநிலத்தில் நான்கு தேர்தல் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன!

526
0
SHARE
Ad
ge13-general-election-mlaaysia

கோலாலம்பூர், ஜூலை 31 – சிலாங்கூர் மாநிலத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த நான்கு தேர்தல் மனுக்களை தேர்தல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அதில் ஒன்று தேசிய முன்னணியைச் சேர்ந்தது மற்ற மூன்று மனுக்கள் எதிர்கட்சியைச் சேர்ந்தவை.

செப்பாங் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் முடிவுகளை எதிர்த்து தேசிய முன்னணி மனு தாக்கல் செய்திருந்தது, கோல சிலாங்கூர் மற்றும் சுங்கை பெசார் நாடாளுமன்ற தொகுதி முடிவுகளை எதிர்த்து பாஸ் கட்சியும், சபா பெர்னாம் நாடாளுமன்ற தொகுதியை எதிர்த்து பிகேஆர் கட்சியும் மனுத்தாக்கல் செய்திருந்தது.

இந்நிலையில், நீதிபதி ஸாலேஹா யூசோஃப், பல மனுக்கள் தேவையான ஆதாரங்கள் இன்றி இருப்பதாகக் கூறி நிராகரித்தார்.

#TamilSchoolmychoice

அத்துடன் மனுதாரர்கள் அனைவரும் தலா 30,000 ரிங்கிட் தேர்தல் ஆணையத்திற்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.