Home கலை உலகம் ஆர்யா, அனுஷ்கா காதல்?: படப்பிடிப்பில் நெருக்கம்

ஆர்யா, அனுஷ்கா காதல்?: படப்பிடிப்பில் நெருக்கம்

591
0
SHARE
Ad

நடிகர் ஆர்யா-நடிகை அனுஷ்கா இடையே திடீரென காதல் மலர்ந்துள்ளது. இருவரும் செல்வராகவன் இயக்கும் ‘இரண்டாம் உலகம்’ படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர்.

படப்பிடிப்புக்கு வரும்போது அறிமுகம் இல்லாமல் தனித்தனியாக வந்தனர். ஆனால் சில வாரங்களிலேயே நெருக்கமானார்கள்.

Irandam-Ulagam-Movie-Latest-Photos-Stills-3_0நயன்தாராவை வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்ததால் அவரைத்தான் ஆர்யா விரும்புகிறார் என செய்திகள் பரவின. இது ஆர்யா, அனுஷ்காவின் ரகசிய காதலுக்கு உதவியாக இருந்தது. இருவரும் ஜாலியாக சுற்றினார்கள். ஐதராபாத்திலும் அடிக்கடி சந்தித்தனர்.

#TamilSchoolmychoice

‘சிங்கம்–2’ பட வெற்றி விழா விருந்தில்தான் இவர்கள் காதல் அம்பலத்துக்கு வந்தது. இந்த படத்தில் அனுஷ்கா கதாநாயகியாக நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்த விருந்து நடந்தது.

நிறைய நடிகர்– நடிகைகளை இந்த விருதுக்கு சூர்யா அழைத்து இருந்தார். ஆர்யாவும், அனுஷ்காவும் கைகோர்த்தபடி வந்தனர். அருகருகே உட்கார்ந்து இருந்தார்கள்.

ஒரு கட்டத்தில் இருவரும் கட்டிப்பிடித்து நடனம் ஆட துவங்கினர். சக நடிகர், நடிகைகளுக்கு அப்போது இவர்கள் காதல் விஷயம் தெரியவந்தது.

தெலுங்கில் ‘ருத்ரமாதேவி’ என்ற படத்தில் அனுஷ்கா நடிக்கிறார். இப்படத்துக்காக குதிரை ஏற்றம், வாள் சண்டை பயிற்சிகள் எடுத்து வருகிறார்.

ஐதராபாத்தில் இதற்கான பயிற்சி நடந்த போது ஆர்யா பக்கத்தில் இருந்து ஆலோசனைகள் சொன்னதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சிம்பு, ஹன்சிகா போல் இவர்களும் தங்கள் காதலை அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.