Home 13வது பொதுத் தேர்தல் தேர்தல் மனுவில் வெற்றி – லெம்பா பந்தாய் தொகுதியை மீண்டும் தக்க வைத்தார் நூருல் இஸா!

தேர்தல் மனுவில் வெற்றி – லெம்பா பந்தாய் தொகுதியை மீண்டும் தக்க வைத்தார் நூருல் இஸா!

575
0
SHARE
Ad

NURULகோலாலம்பூர்,ஆகஸ்ட்  1 – லெம்பா பந்தாய் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் முடிவுக்கு எதிராக, அத்தொகுதி அம்னோ செயலாளர்  முகமட் சஸாலி கமிலன் தாக்கல் செய்திருந்த தேர்தல் மனுவை,இன்று தேர்தல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதன் மூலம் லெம்பா பந்தாய் தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரான நூருல் இஸா மீண்டும் தனது தொகுதியைத் தக்க வைத்துக்கொண்டார்.

தேர்தல் மனு மீதான விசாரணையில், நூருல் இஸாவின் வழக்கறிஞர் எட்மண்டு பானின் பெரும்பாலான முதல்கட்ட ஆட்சேபனைகளை நீதிபதி ஸாபாரியா முகமட் யூசோப் ஏற்றுக்கொண்டார்.

#TamilSchoolmychoice

மேலும், செலவுத் தொகையாக 40,000 ரிங்கிட் வழங்க வேண்டும் என்று அம்னோ வேட்பாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

நடந்து முடிந்த மே 5 பொதுத்தேர்தலில், லெம்பா பந்தாய் தொகுதியில் முன்னாள் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ராஜா நாங் சிக் சைனல் அபிடின்னுக்கு எதிராகக் களமிறங்கிய நூருல் இஸா கடுமையான போட்டியை சந்தித்தார்.

ராஜா நாங் சிக் 29,161 வாக்குகள் பெற்றார். அவருக்கு எதிராக 31,008 வாக்குகள் பெற்ற நூருல் இஸா, 1,847 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.