Home 13வது பொதுத் தேர்தல் “தேச நிந்தனைச் சட்டத்தை நீக்க வேண்டும்” – நூருல் இஸா மனுத் தாக்கல்

“தேச நிந்தனைச் சட்டத்தை நீக்க வேண்டும்” – நூருல் இஸா மனுத் தாக்கல்

626
0
SHARE
Ad

Nurul Izzah Anwarகோலாலம்பூர், ஜூலை 2 – கடந்த 1948 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தேச நிந்தனைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று கூறி தனி உறுப்பினர் மனு ஒன்றை, லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினரும், பிகேஆர் கட்சியின் துணைத் தலைவருமான நூருல் இஸா, இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அதன் பிறகு நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனது மனு நாடாளுமன்றத்தில்  விவாதத்திற்கு கொண்டு வரப்படும் என்று நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், நாடாளுமன்ற கூட்டத்தில் வழக்கமாக எதிர்கட்சிகளின் மனுக்கள் ஏற்கப்படுவதில்லை என்று குறிப்பிட்ட நூருல் இஸா, அரசாங்கம் இது குறித்து வாக்குறுதி அளித்துள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

#TamilSchoolmychoice

தேசிய உருமாற்றுத் திட்டத்தின் கீழ் தேச நிந்தனைச் சட்டம் நீக்கப்படும் என்று கடந்த ஆண்டு பிரதமர் நஜிப் துன் ரசாக் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.