Home அரசியல் தேச நிந்தனைச் சட்டம் ரத்து செய்வதில் தாமதம் ஏற்படுவது ஏன்? – நூருல் இஸா விளக்கம்

தேச நிந்தனைச் சட்டம் ரத்து செய்வதில் தாமதம் ஏற்படுவது ஏன்? – நூருல் இஸா விளக்கம்

594
0
SHARE
Ad

nurul-izzahகோலாலம்பூர், ஜூலை 8 – தேச நிந்தனைச் சட்டத்தை ரத்து செய்வதில் தாமதம் ஏற்படுவதற்கு, அம்னோ தலைவர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் தான் காரணம் என்று பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இஸா அன்வார் கூறியுள்ளார்.

இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தேச நிந்தனைச் சட்டம் தொடர வேண்டும் என்று உள்துறை அமைச்சர் சாஹிட் கூறிவருகிறார். ஆனால் சுற்றுலாத்துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நான்சி சுக்ரி ஆகியோர் ரத்து செய்ய வேண்டும் என்கின்றனர். இதனால் அம்னோ தலைவர்களிடையே இருவேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன.எனவே தேச நிந்தனை சட்டம் குறித்து நஜிப் தனது உண்மை நிலையை விளக்க வேண்டும்” என்று கூறினார்.

தேச நிந்தனைச் சட்டம் ரத்து செய்யப்பட்டு அதற்குப் பதிலாக ‘தேசிய நல்லிணக்கச் சட்டம்’ உருவாக்கப்படும் என்று நஜிப் கடந்த வருடம் ஜூலை மாதம் அறிவித்தார்.

#TamilSchoolmychoice

ஆனால் தற்போது அரசாங்கம் தேச நிந்தனைச் சட்டத்தை ரத்து செய்வதில் தாமதம் ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.