Home கலை உலகம் ரூ.1 கோடி சம்பளம் கேட்பதா?: நடிகை தமன்னா மீது தயாரிப்பாளர் பாய்ச்சல்

ரூ.1 கோடி சம்பளம் கேட்பதா?: நடிகை தமன்னா மீது தயாரிப்பாளர் பாய்ச்சல்

819
0
SHARE
Ad

ஜூலை 9- நடிகை தமன்னா ரூ.1 கோடி சம்பளம் கேட்டு கெடுபிடி செய்வதாக தெலுங்கு தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ‘ஹேப்பி டேஸ்’ படத்தில் நடித்த போது ரூ.30 லட்சம் தான் சம்பளம் வாங்கினார். ஆனால் இப்போது சம்பளத்தை கோடிக்கு ஏற்றி விட்டதாக மூத்த தயாரிப்பாளர் ஒருவர் எரிச்சல் பட்டார்.

tamanaதமன்னாவின் ‘ஹேப்பி டேஸ்’ தெலுங்கு படம் 2007–ல் வெளியானது. அதன் பிறகுதான் தமிழில் கல்லூரி, தனுசுடன் படிக்காதவன், சூர்யாவுடன் அயன், கார்த்தியுடன் சிறுத்தை படங்களில் நடித்தார். தற்போது அவருக்கு தமிழில் படங்கள் இல்லை. தெலுங்கில் இரு படங்களிலும் இந்தியில் இரண்டு படங்களிலும் நடிக்கிறார். இந்தி படத்தில் நடிப்பதால்தான் சம்பளத்தை உயர்த்திவிட்டதாக கூறப்படுகிறது.

நயன்தாரா, அனுஷ்கா, காஜல்அகர்வால் போன்றோர் ரூ.1 கோடியை தாண்டியுள்ளனர். அவர்கள் பட்டியலில் தமன்னாவும் இடம் பெறுகிறார். இவ்வளவு சம்பளம் தமன்னாவுக்கு கொடுப்பது அதிகம் என தெலுங்கு பட அதிபர்கள் முணு, முணுக்கின்றனர். எனவே அடுத்து வரும் படங்களில் தமன்னாவுக்கு பதில் வேறு நடிகைகளை ஒப்பந்தம் செய்ய தயாராகி வருகிறார்கள்.