Home அரசியல் “அமைச்சரவையினர் கார்களைத் திருப்பித் தரவேண்டும்” – நூருல் இஸா அறைகூவல்

“அமைச்சரவையினர் கார்களைத் திருப்பித் தரவேண்டும்” – நூருல் இஸா அறைகூவல்

579
0
SHARE
Ad

Nurul Izzah,ஏப்ரல் 11 – நாட்டின் பராமரிப்பு அரசாங்கத்தின் பிரதமரும், அவரது அமைச்சரவை சகாக்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட அரசு வாகனங்களைத்  திருப்பித் தரும் அதே வேளையில், கூட்டரசப்பிரதேச மற்றும் மாநில அரசுகள் கோலாலம்பூர் மாநகரசபை உட்பட, அரசுக்குச் சொந்தமான எவற்றையும் தேசிய முன்னணியின் பரப்புரைக்குப் பயன்படுத்தக்கூடாது என்று பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இசா அன்வார் தெரிவித்தார்.

நூருல் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமாவார்.

சிலாங்கூர் அரசும்,பினாங்கு அரசும் கலைக்கப்பட்டப்பின் அவை தங்களுக்கு வழங்கப்பட்ட அரசாங்க வண்டிகளை திருப்பித்தந்துவிட்ட வேளையில், தேசிய முன்னணியின் தலைவரும், இடைக்காலப் பிரதமருமான நஜிப்பும் அவரது அமைச்சர்களும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்பும் அரசு வசதிகளை உபயோகித்து தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாக நூருல் இன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

அவற்றுள் ஆட்சிக் கலைப்புக்குப் பின் அவர் அறிவித்த 8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள திட்டங்களும், பணி ஓய்வு பெற்றவர்களுக்கான 1மலேசியா அட்டையின் வசதிகள் நீட்டிப்பும் அடங்கும் என்றார் அவர்.

பரப்புரைக்கும், நிர்வாகத்திற்கும் மற்றும் தற்காலிக அரசாங்கம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களால் எப்படி மக்களின் தேவைகளை  நேர்மையான முறையில் நிறைவேற்றமுடியும் அல்லது ஆக்ககரமான மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று அவர் வினவினார்.

இவ்வாறு அவர்கள் ஜனநாயத்திற்கு எதிராக தேர்தலுக்கு அரசு இயந்திரங்களை பயன்படுத்துவதை பிகேஆர் கட்சியும் கவனித்து வெளிப்படுத்தும் என்றும், பொதுமக்களும் அதை கண்காணித்து  தங்களிடமோ தேர்தல் கண்காணிப்புக் குழுவிடமோ புகார் செய்யலாம் என்றும் நூருல் கூறினார்.