ஆக .2- செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா நடித்து வரும் படம் ‘இரண்டாம் உலகம்’.
நீண்ட நாட்களாக படப்பிடிப்பு நடத்தி வரும் இந்த படத்தை பி.வி.பி. சினிமாஸ் மிகப் பிரம்மாண்டமாக தயாரித்து உள்ளது.
இப்படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகம் இருப்பதால், அதற்குண்டான பணிகள் தற்போது மும்பையில் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது.
இப்படத்தில் ஆர்யா, அனுஷ்கா இருவருமே இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார்களாம். ஆந்திரா மற்றும் சென்னையில் பிரம்மாண்ட செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.
படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாக இருக்கும் இப்படத்தின் பாடலை வரும் ஆகஸ்ட் 4-ந் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.
இந்த விழாவில், திரையுலகைச் சேர்ந்த பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பாடலை வெளியிடவிருக்கின்றனர்.