Home இந்தியா 7–ந்தேதி சென்னை வரும் பிரணாப்முகர்ஜிக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு

7–ந்தேதி சென்னை வரும் பிரணாப்முகர்ஜிக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு

500
0
SHARE
Ad

சென்னை, ஆக. 6– ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நாளை  (7–ந்தேதி) சென்னை வருகிறார்.

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க ராணுவ விமானம் மூலம் பிற்பகல் 3 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கிருந்து ராஜ்பவன் செல்கிறார். பின்னர் விழாவில் பங்கேற்று விட்டு மாலை 6.30 மணிக்கு டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

ஜனாதிபதி சென்னை வருவதையொட்டி பாதுகாப்பு தீவிரப்படுத்தப்படுகிறது. அவர் சென்னை வந்து விட்டு டெல்லி புறப்படும் வரை தமிழக போலீசார் பாதுகாப்பில் விடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

India-Politics-Presidentஜனாதிபதி வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இது தொடர்பாக உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. டெல்லி பாதுகாப்பு அதிகாரிகள், தமிழக போலீஸ் உயர் அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

ஜனாதிபதிக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். ஜனாதிபதி வருகைக்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கப்படும்.

அந்த அடிப்படையில் நேற்று மாலையில் இருந்து விமான நிலையம் முதல், விழா நடக்கும் இடம் வரை பாதுகாப்பு பொறுப்பினை தமிழக போலீசார் ஏற்றுள்ளனர்.

பாதுகாப்பு ஒத்திகையும் இன்று  நடைபெறுகிறது. விமான நிலையத்தில் இருந்து ராஜ்பவன் வரை இந்த ஒத்திகை நடக்கிறது.

ஜனாதிபதி வருகையை தொடர்ந்து விமான நிலையத்தில் தமிழக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்களும் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.