இவ்விவகாரம் சேரனுக்கு தெரிய வர முதலில் அவர்கள் காதலை எதிர்த்தவர் அதன் பிறகு ஒப்புக்கொண்டுள்ளார். படிப்பு முடிந்தவுடன் தானே திருமணம் செய்து வைப்பதாகவும், அதற்குள் சந்துருவும் ஒரு நல்ல நிலைக்கு வர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில், சேரனின் மகள் தாமிணி, தனது தந்தை காதலைப் பிரிக்க முயற்சி செய்வதாகவும், சந்துருவை ஆட்களை வைத்து மிரட்டுவதாகவும் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார்.
அதன் பிறகு, தாமிணியை ஆஜர்படுத்த காதலர் சந்துருவின் தாயார் ஈஸ்வரியம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.
அதன்படி, தாமிணியை நேரில் ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து, இன்று பிற்பகலில் தாமிணியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதிகள் காவல்துறைக்கு ஆணையிட்டுள்ளனர்.