Home இந்தியா பாகிஸ்தானின் வஞ்சக சூழ்ச்சிக்கு இந்தியா அடிபணியாது: சோனியா கடும் கண்டனம்

பாகிஸ்தானின் வஞ்சக சூழ்ச்சிக்கு இந்தியா அடிபணியாது: சோனியா கடும் கண்டனம்

466
0
SHARE
Ad

புதுடெல்லி,ஆக.7- 5 வீரர்கள் படுகொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்த சோனியா காந்தி, பாகிஸ்தானின் வஞ்சக சூழ்ச்சிக்கு இந்தியா அடிபணியாது என்று குறிப்பிட்டார்.

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 5 பேர் பலியானார்கள்.

sonia-gandhi_60காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

பலியான 5 பேருடைய குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்ட அவர், தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் கட்சியும் இந்த நாடும் ஆதரவாக இருக்கும் என்று தெரிவித்தார்.

‘‘இதுபோன்ற அப்பட்டமான வஞ்சக சூழ்ச்சிக்கு இந்தியா ஒருபோதும் அடி பணியாது’’ என்று கூறிய அவர், இந்த பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசை வலியுறுத்தினார். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும், 5 இந்திய வீரர்கள் பலியானதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

‘‘இதுபோன்ற ஆத்திரமூட்டக்கூடிய நடவடிக்கை குறித்து உயர் மட்ட அளவில் எடுத்துச் செல்ல வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.