Home கலை உலகம் விஜய் படம் வெளியாகும் 9 சினிமா திரையரங்கில் வெடிகுண்டு மிரட்டல்

விஜய் படம் வெளியாகும் 9 சினிமா திரையரங்கில் வெடிகுண்டு மிரட்டல்

569
0
SHARE
Ad

சென்னை, ஆக. 7– சென்னை மயிலாப்பூரில் சிட்டி சென்டர் காம்ப்ளக்ஸ் உள்ளது.

இங்கு நவீன வசதியுடன் ‘ஐநாக்ஸ்’ என்ற பெயரில் 4  திரையரங்குகள் உள்ளன. வணிக வளாகம் மற்றும் சினிமா திரையரங்குகள் உள்ளதால் இந்த  வளாகம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

ஐநாக்ஸ் திரையரங்கில் வருகிற 9–ந் தேதி விஜய் நடித்துள்ள ‘தலைவா’ படம் வெளியிடப்படுகிறது.

#TamilSchoolmychoice

இந்த நிலையில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்ட மாணவர் புரட்சிப் படை என்ற பெயரில் இந்த  திரையரங்கிற்கு ஒரு கடிதம் வந்தது.

Vijay-in-Thalaiva-First-look-wallpaperஅந்த கடிதத்தில், தலைவா படத்தை திரையிட்டால் ஐநாக்ஸ் திரையரங்கில்  குண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இது குறித்து மயிலாப்பூர் போலீசில் திரையரங்கு மானேஜர் விக்னேஷ் புகார் செய்தார்.

இதையடுத்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் தாஸ் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்களும் சோதித்து பார்த்தனர்.

இது தவிர மகாராணி, அபிராமி, சத்யம், தேவி, மாயாஜால், பாரத், ஜி.வி.ஆர்., ஏ.ஜி.எஸ். ஆகிய திரையரங்கிலும்  ‘தலைவா’ படம் திரையிடப்படுகிறது.

இந்த திரையரங்கிற்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து இருப்பதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

சில திரையரங்கிற்கு தொலைபேசி மூலமும், சில திரையரங்கிற்கு காரில் வந்த சிலரும் மிரட்டல் விடுத்ததாக போலீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள 9 திரையரங்கிற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

‘தலைவா’ படத்துக்கு இன்று பட சீட்டுகள்  முன் பதிவு செய்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

வெடி குண்டு மிரட்டல் காரணமாக முன்பதிவு நடைபெற வில்லை. இதனால் பட சீட்டுகள் முன்பதிவு செய்ய வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.