Home அரசியல் அம்னோவில் மறுசீரமைப்பு தேவை – அப்துல்லா படாவி

அம்னோவில் மறுசீரமைப்பு தேவை – அப்துல்லா படாவி

568
0
SHARE
Ad

book-300x175

கோலாலம்பூர், ஆகஸ்ட் 7 – அம்னோவில் தற்போது மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்று முன்னாள் பிரதமர் அப்துல்லா படாவி தனது  ‘அவேக்கினிங் தி அப்துல்லா இயர்ஸ் இன் மலேசியா – AWAKENING THE ABDULLAH BADAWI YEARS IN MALAYSIA’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“அம்னோ தற்போது வேறு பாதையில் செல்கிறது. வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால் அதை மறுசீரமைப்பு செய்ய வேண்டும்”

#TamilSchoolmychoice

“நான் பார்த்தவரையில் மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு வந்திருக்கிறது. ஆனால் அதற்கான விருப்பத்தை நான் யாரிடத்திலும் காணவில்லை”

“Ketuanan Melayu (மலாய் மேலாண்மை) என்பது உரிமை அல்ல. அதனை உழைத்து தான் பெற வேண்டும்” என்று படாவி குறிப்பிட்டுள்ளார்.

“நீங்கள் பூமிபுத்ரா என்ற ஒரே காரணத்திற்காக, எல்லோரும் உங்களிடத்தில் எல்லாவற்றையும் ஒப்படைத்து விட்டு உங்களை ‘துவான்’ என்று அழைப்பார்கள் என்று எதிர்பார்க்கக்கூடாது” என்று படாவி தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.