Home அரசியல் “நான் அவனை விட அழகாக இருக்கிறேன்” – புலனாய்வுத்துறை தலைவர் கருத்து

“நான் அவனை விட அழகாக இருக்கிறேன்” – புலனாய்வுத்துறை தலைவர் கருத்து

507
0
SHARE
Ad

68095_497394257019870_1622417413_nகோலாலம்பூர், ஆகஸ்ட் 7 – அராப் வங்கி நிறுவனர் நஜாடியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த கொலையாளியின் படத்தை நேற்று கோலாலம்பூர் புலனாய்வுத்துறைத் தலைவர் கு சின் வா வெளியிட்டார்.

கொலையாளியின் படமும், கு சின் வா படமும் ஒரே மாதிரி இருப்பதாக இணையத்தில் பலரும் விமர்சித்தனர்.

இருப்பினும், கு சின் வா தனக்கும், அந்த கொலையாளிக்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதாகவும், தான் அவனை விட மிகவும் அழகாக இருப்பதாகவும் தி ஸ்டார் இணையத்தளத்திற்கு அனுப்பிய குறுஞ்செய்தியில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இது குறித்து தேசிய காவல் துறைத் தலைவர் காலிட் அபு பக்கரும், கொலையாளியை விட கு சின் வா மிகவும் அழகு தான் என்று ஒப்புக்கொண்டுள்ளார்.

கு சின் வா தனது கையில் கொலையாளியின் புகைப்படத்தை வைத்திருப்பது போல் உள்ள படம் நேற்று இணையத்தளங்களில் பரவலாக வெளியிடப்பட்டது.

நிறைய பேர் கு சின் வாவும், அந்த கொலையாளியும் இரட்டையர்கள் போல் தோற்றமளிப்பதாக விமர்சனம் செய்தனர்.

கடந்த ஜூலை 29 ஆம் தேதி, கோலாலம்பூர் ஜாலான் செய்லானில் உள்ள குவான் யின் சீன கோவில் அருகே அராப் வங்கி நிறுவனர் நஜாடி துப்பாக்கியால் சுடப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

நிலத்தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருப்பதாக காவல்துறையினர் சிலரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.