Home நாடு சொத்து விவரங்களை வெளியிட வேண்டுமென்ற கோரிக்கைகளை கர்பால் சிங் நிராகரித்தார்!

சொத்து விவரங்களை வெளியிட வேண்டுமென்ற கோரிக்கைகளை கர்பால் சிங் நிராகரித்தார்!

567
0
SHARE
Ad

anwar-karpalகோலாலம்பூர், ஆகஸ்ட் 7 – நீதித்துறையில் லஞ்சம் வாங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களை நீக்க, ஜசெக தலைவர் கர்பால் சிங் தனது சொத்துக்களை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நிராகரித்துள்ளார்.

அத்தகைய கோரிக்கைகள் முக்கியமானவை அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து கர்பால் சிங் கூறுகையில், “முக்கியமில்லாத கோரிக்கைகளுக்கும், சம்பந்தமில்லாத அறிக்கைகளுக்கும் பதிலளிக்க எனக்கு நேரமில்லை” என்று தெரிவித்துள்ளதாக நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சித் சிங் டில்லன் என்ற வழக்கறிஞரும், கெடா கீத்தா கட்சித் தலைவர் ஜமீல் இப்ராகிமும், இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எதிர்கட்சித்தலைவர் அன்வார் இப்ரகிமும், ஜசெக தலைவர் கர்பால் சிங்கும் தங்களது சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டிருந்தது.

கடந்த 2008 ஆம் ஆண்டிற்குப் பின்னர், அன்வார் இப்ராகிம் தனது வழக்குகள் குறித்து நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும் லஞ்சம் கொடுப்பதற்காக, கர்பாலுக்கு 50 மில்லியன் ரிங்கிட் கொடுத்ததாக பெர்மாத்தாங் பாவ் தொகுதி முன்னாள் தேசிய முன்னணி வேட்பாளரான மஸ்லான் இஸ்மாயில் குற்றம் சாட்டியிருந்தார்.