Home கலை உலகம் தமிழ் நாட்டில் “தலைவா” இன்று திரையீடு காணவில்லை!

தமிழ் நாட்டில் “தலைவா” இன்று திரையீடு காணவில்லை!

866
0
SHARE
Ad

th1

#TamilSchoolmychoice

ஆகஸ்ட் 9 – தமிழகத்தில் இருந்து வெளியாகியுள்ள தகவல்களின் படி விஜய் நடிப்பில் வெளிவந்திருக்கும் “தலைவா” படம் இன்று தமிழகத்தில் திரையீடு காணவில்லை. இதனால், திரையரங்கு அதிபர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் இந்தப் படத்தினால் பலத்த நஷ்டம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதுமட்டுமல்லாமல், வெளிநாடுகளில் இந்த படம் வெளியீடு கண்டு விட்டதால், அதன் மூலம் இந்தப் படத்தின் கள்ளப் பதிப்பு ஒளி நாடாக்கள் (விசிடி, டிவிடி) தமிழ் நாட்டிற்குள் அதிகமாக ஊருவும் வாய்ப்பும் ஏற்படும். இதனாலும் “தலைவா” படத்தின் வசூலும் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அது மட்டுமல்லாமல் இந்தப் படம் குறித்த இணையத் தள விமர்சனங்கள் அவ்வளவு திருப்திகரமாக இல்லை என்பதாலும், படம் பார்க்க வரும் நடுநிலை ரசிகர்களின் எண்ணிக்கையும் பெருமளவில் பாதிக்கப்படும் என தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு, பாண்டிச் சேரி தவிர, இந்தியாவின் மற்ற பகுதிகளிலும், மற்ற உலக நாடுகளிலும் தலைவா படம் நேற்று முதல் வெளியீடு கண்டது.

“விஸ்வரூபம்” படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனையைப் போன்றே பாதுகாப்பு காரணங்களுக்காக தலைவா படத்தின் வெளியீடும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

தலைவா படம் வெளியிடப்படவிருந்த திரை அரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வரத் தொடங்கியதைத் தொடர்ந்து இந்தப் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டிருக்கின்றது.

“தலைவா” படம் குறித்த செல்லியல்.காம் விமர்சனத்தை கீழ்க்காணும் வலைத்தள இணைப்பில் வாசகர்கள் காணலாம்.

http://www.selliyal.com/?p=36011