Home அரசியல் “நஜிப் பதவி ஏற்று 100 நாட்கள் ஆகிவிட்டது – மக்களை ஒன்றுபடுத்துவது தான் பெரும் சவால்”...

“நஜிப் பதவி ஏற்று 100 நாட்கள் ஆகிவிட்டது – மக்களை ஒன்றுபடுத்துவது தான் பெரும் சவால்” – அரசியல் ஆர்வலர்கள் கருத்து

426
0
SHARE
Ad
Najib

கோலாலம்பூர், ஆகஸ்ட் 14 – பிரதமர் நஜிப் துன் ரசாக் பதவியேற்று நேற்றோடு 100 நாட்கள் கடந்து விட்ட நிலையில், நாட்டின் நிலைப்புத்தன்மையைப் பேணிக்காப்பதில் உள்ள சவால்களை சமாளிப்பதில் உறுதி கொண்டுள்ளார்.

நடந்து முடிந்த 13 வது பொதுத்தேர்தலுக்குப் பிறகு சமுதாயத்தில் ஏற்பட்ட விரிசலை சமாளிப்பது தான் நஜிப்புக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று பலர் கருதினர்.

அடுத்த பொதுத்தேர்தலிலும் தேசிய முன்னணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் அமர வேண்டுமானால் சமுதாயத்தை ஒன்றிணைக்க வேண்டும் என்று அரசியல் ஆர்வலர் பேராசிரியர் டத்தோ ஜைனல் கிளிங் கருத்துத் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், “குடிமக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து மலேசியர்கள் என சிந்திக்க வைப்பது பெரும் சவாலாக இருக்கும். அதே நேரத்தில்,14 வது பொதுத்தேர்தலில் அவர்கள் மலேசியர்களாகச் சிந்தித்து வாக்களிக்கிறார்களா அல்லது தங்கள் இனத்தை முன்னிருத்தி வாக்களிக்கிறார்களா என்பது தான் மிகப் பெரிய சவாலாக விளங்கும்” என்றும் ஜைனல் கிளிங் கூறியுள்ளார்.

இதே போன்ற ஒரு கருத்தை சமுதாய செயல்வாதி டான்ஸ்ரீ லீ லாம் தையும் வெளியிட்டிருக்கிறார்.

அவரின் கருத்துப்படி, அரசாங்கம் 1 மலேசியா சிந்தனையின் கீழ் அனைவரையும் ஒன்று படுத்த வேண்டும் என்றும், இனவாத அரசியலைத் தொடர்ந்து நடத்தினால் 1 மலேசியா ஒன்றிணைப்பு சாத்தியமில்லை என்றும் கூறியுள்ளார்.

அதோடு, நாட்டு மக்களின் ஒற்றுமைப் பிரச்சனையில் பிரதமர் இன்னும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் லீ லாம் கருத்துத் தெரிவித்துள்ளார்.