Home வணிகம்/தொழில் நுட்பம் பிளேக் பெர்ரி நிறுவனம் பங்கு சந்தையிலிருந்து விடுபட்டு தனியார் மயமாகலாம்!

பிளேக் பெர்ரி நிறுவனம் பங்கு சந்தையிலிருந்து விடுபட்டு தனியார் மயமாகலாம்!

762
0
SHARE
Ad

images (1)ஆகஸ்ட் 13 – தொடர்ந்து நஷ்டத்தை எதிர்நோக்கி வரும் கனடா நாட்டின் விவேகக் கைத்தொலைபேசி தயாரிப்பாளரான பிளேக் பெர்ரி நிறுவனம் பங்குச் சந்தையிலிருந்து விடுவிக்கப்பட்டு கூடிய விரைவில் தனியார் நிறுவனமாக மாறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

இந்த நிலையில், நேற்று திங்கட்கிழமை பிளேக் பெர்ரி தயாரிப்பு நிறுவனமான ரிசர்ச் இன் மோஷன் பங்குச் சந்தையிலிருந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த நிறுவனம் தனது அடுத்த கட்ட நடவடிக்கையை ஆராய்வதற்காக ஒரு சிறப்புக் குழுவை அமைத்துள்ளது.

புதிதாக வடிவமைக்கப்பட்ட பிளேக் பெர்ரி கைத்தொலைபேசிகள் சந்தையில் போதிய வரவேற்பைப் பெறாமல், 2.7 மில்லியன் எண்ணிக்கையிலான கைத்தொலைபேசிகள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதால் இந்த நிறுவனம் முதல் காலாண்டில் 84 மில்லியன் அமெரிக்க டாலர் நஷ்டத்தை சந்தித்துள்ளது.

இதனால், நிறுவனத்தை பங்குச் சந்தையிலிருந்து விடுவித்தால் அதன்மூலம், பல முடிவுகளை துரிதமாகவும், எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் எடுக்க முடியும் என்பதால் இந்த நிறுவனத்தை தனியார் வசமாக்கும் முடிவை பங்குதாரர்கள் கூடிய விரைவில் எடுப்பார்கள் என கருதப்படுகின்றது.

போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் பிளேக் பெர்ரி கடந்த ஒரு வருடத்தில் பிளேக் பெர்ரி 10 மென்பொருளைக் கொண்ட மூன்றே ரக கருவிகளை மட்டுமே உற்பத்தி செய்து வெளியிட்டது. ஆனால், ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் வெளிவருவதற்கு முன்னால் ஆண்டுக்கு 10 ரக (மாடல்) கருவிகளை பிளேக் பெர்ரி வெளியிட்டது.

தனது உற்பத்தித் திறனை மேம்படுத்தும் நோக்கிலும் நிறுவனத்தின் நிதி நிலைமையை சீர்படுத்தும் நோக்கிலும் தொடர்ந்து பணியாட்களைக் குறைக்கும் நடவடிக்கைகளை பிளேக் பெர்ரி நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.

பிளேக் பெர்ரி நிறுவனத்திற்கு இருக்கும் மற்றொரு வாய்ப்பு இன்னொரு தொழில் நுட்ப நிறுவனத்துடன் ஒன்றிணைவதுதான். இது குறித்த சாத்தியக் கூறுகளும் ஆராயப்பட்டு வருகின்றன.

ஐ-போன் பயன்படுத்து ஐஓஎஸ், அண்ட்ரோய்ட் ரக தொழில் நுட்பம், விண்டோஸ் தொழில் நுட்பம் ஆகியவற்றைத் தாண்டி, நான்காவது நிலையில் தற்போது பிளேக் பெர்ரியின் கைத்தொலைபேசி தொழில் நுட்பம் இருந்து வருகின்றது.